இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் உதவி அவசியம்: தாரகபாலசூரிய
இலங்கை பிராந்திய நிதி மற்றும் வர்த்தகதளமாக மாறவேண்டும் என்றால் கொழும்பு துறைமுகநகரம் அதற்கு மிகவும் அவசியம் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூரிய தெரிவித்துள்ளார்.
சீனாவில் இடம்பெற்ற சீனா சவுத்ஏசியன் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது சூழல்சவால்களிற்கு கூட்டாக தீர்வு காண்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பான கடற்பயணத்தை உறுதி செய்ய முடியும்.
இதன் மூலமாக அடுத்துவரும் தலைமுறைகளுக்கு எங்கள் சமுத்திரங்களை பாதுகாத்து வழங்க முடியும்.
புதிய பட்டுப்பாதை திட்டம்
2012 முதல் இலங்கையின் முக்கியமான முதலீட்டு சகாவாக சீனா மாறியுள்ளது.
2005 முதல் 22 வரை 3.334 மில்லியன் டொலர்களை சீனா முதலீடு செய்துள்ளது.
இதில் சில பாரிய அபிவிருத்தி திட்டங்கள் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை ஆதரிக்கும் நோக்கத்தை கொண்டவை.
மேலும், இலங்கையின் பொருாளாதாரத்தை தொடர்ந்தும் முன்நகர்த்துவதற்கு சீனாவின் முதலீடுகள் மிகவும் அவசியமானவை.
இதற்கமைய இலங்கை சமீபத்திய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுகொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இலங்கையில் மேலும் முதலீடு செய்யுமாறு சீனாவை அழைக்கின்றோம்.” எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




