அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் புதிய திருத்தங்கள்
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை கீழ்க்காணும் திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி அஸ்வெசும பயனாளியாக தகைமை பெற்றவர்களில் இடர்களுக்கு உள்ளாகியுள்ள சமூகப் பிரிவுக்கான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கான செல்லுபடிக் காலத்தை 2024.04.01 தொடக்கம் 2024.12.31 வரையும், நிலைமாறுநிலை (பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ள) நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கான செல்லுபடிக் காலத்தை 2024.01.01 தொடக்கம் 2024.12.31 வரையும் நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை முடிவில் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு வெளியே மாவட்டச் செயலாளர்கள்/பிரதேச செயலாளர்கள் மூலம் மேற்கொள்ளல், இரண்டாவது சுற்றுக்காக விண்ணப்பங்களைக் கோரல் 2024 முதலாம் காலாண்டில் ஆரம்பித்து 2024 ஜூன் மாதத்தில் நிறைவு செய்யப்பட்டு ஜூலை மாதம் தொடக்கம் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், மேலதிகமாக தகைமைகளைப் பெறுகின்ற குடும்பங்களை உள்வாங்குவதற்கும் தகைமை பெறுகின்ற குடும்பங்களின் மொத்த எண்ணிக்கையை உயர்ந்தபட்சம் 2.4 மில்லியன்களாகத் திருத்தம் செய்யவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |