உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் புதிய திருத்தங்கள்: விஜயதாச ராஜபக்சவின் கருத்து - பத்திரிகை கண்ணோட்டம்
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்களை அரசியல் தேவைப்பாடுகளின் அடிப்படையிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் உத்தரவுவின்பேரிலோ பொலிஸாரால் தடுத்து வைப்பதற்கு காணப்படும் அதிகாரம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் இல்லாதொழிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முழுமையான மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதுடன் புதிய சட்டத்தின் கீழ் பொலிஸாரோ அல்லது வேறு தரப்பினரோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு இடமளிக்கமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்களை தடுப்புக்காவல் உத்தரவின் பிரகாரம் நீண்ட காலமாக தடுத்து வைப்பதற்கான வாய்ப்பு காணப்படிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan