உயர் பதவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
புதிய தூதுவர், அமைச்சின் செயலாளர் மற்றும் இரு நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இத்தாலி குடியரசின் புதிய இலங்கை தூதுவராக எஸ்.ஏ.ரொட்றிகோவின் நியமனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
நியமனத்துக்கு அனுமதி
அத்துடன், நீர் வளங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக ஏ.சி.எம். நஃபீல் நியமனத்துக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் புதிய தலைவராக டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்கவின் நியமனத்துக்கும், இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் தலைவராக என்.கே.எஸ்.ஜயசேகரவின் நியமனத்துக்கும் அனுமதி கிடைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |