மற்றொரு விமான நிலையம் அமைக்க தயாராகும் அரசாங்கம்
விமானப்படையால் நடத்தப்படும் ஹிகுரக்கொடட விமான ஓடுதளத்தை மேம்படுத்தி மற்றுமொரு சிவில் விமான நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (03.05.2023) துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது.
தற்போதுள்ள ஓடுபாதையின் நீளம் 2287 மீட்டர். இதனை 2800 மீட்டராக நீட்டித்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் கட்டுமானம்
விமான தளம் அமைத்தல், விமான இயக்க முறைமையின் ஏற்பாடு, கட்டுப்பாட்டு கோபுரம் அமைத்தல், பயணிகள் முனையங்கள் அமைத்தல் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
சிகிரியா, அனுராதபுரம், தம்புள்ளை போன்ற நகரங்களுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விமான நிலையத்தின் கட்டுமானம் மிகவும் வசதியாக இருக்கும் என்று அதன் திட்டமிடுபவர்கள் கூறுகின்றனர்.