விமான சேவைகள் அதிகரிப்பு! வெளியானது புதிய அறிவிப்பு
இலங்கை தொடர்பில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை அதிகரிக்க எமிரேட்ஸ் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணிகளின் கோரிக்கை
பயணிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து டிசம்பர் 1ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி கொழும்புக்கும் டுபாய்க்கும் இடையிலான தினசரி பயணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு விமானம் மாலைதீவு, மாலே வழியாகச் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

