இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் புதிய விமானங்கள்
இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் விமான பயணிகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விரைவில் மூன்று புதிய விமான நிறுவனங்கள் இந்தியாவில் விமானப்பயணத்தை ஆரம்பிக்க தயாராகவுள்ளன.
தடையில்லா சான்றிதழ்கள் பெறல்
இவற்றில், அல் ஹிந்த் ஏர் மற்றும் ஃப்ளைஎக்ஸ்பிரஸ் ஆகியன இந்த வாரம், தடையில்லா சான்றிதழ்களை (NOC) பெற்றுள்ளன, அதே நேரத்தில் ஷாங்க் ஏர் முன்னதாக அதன் அனுமதியைப் பெற்றுள்ளது.

2025, டிசம்பர் முதல் வாரத்தில் இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட இடையூறுகளின் பின்னணியில் இந்த வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவில் செயல்பாடுகளை தொடங்க விரும்பும் ஷாங்க் ஏர், அல் ஹிந்த் ஏர் மற்றும் ஃப்ளைஎக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களின் குழுக்களுடன் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த வாரம் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அனுமதிகள் கிடைத்துள்ளன.
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
சன் டிவியில் கணவன், ஜீ தமிழில் மனைவி என நடிக்கும் ரியல் சீரியல் ஜோடிகள்... யாரெல்லாம் பாருங்க Cineulagam