மகிந்த வீட்டின் செல்லபிள்ளைக்கு மனம்பேரியுடன் தொடர்பு.. புலனாய்வில் அம்பலமாகும் தகவல்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சிக்கும் சம்பத் மனம்பேரிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை பொலிஸ் துறையை அரசியலிலிருந்து விடுவிக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால இதனை தெரிவித்துள்ளார்.
நெவில் வன்னியாரச்சி, தற்போது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைதி மீது தாக்குதல்
இந்நிலையில், இக்கைது தொடர்பில் விளக்கமளித்த அஜித் தர்மபால, "போதைப்பொருள் தடுப்பு பிரிவின் ஆணையாளரான ஏமால் பிரசாந்த நெவில் வன்னியாரச்சியின் ஒன்றுவிட்ட சகோதரன் வீரகெட்டியவை சேர்ந்தவராவார். இப்போது வசிப்பது காலியிலாகும்.
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராவார். மேலும் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் பிரசாந்தவின் ஒன்றுவிட்ட சகோதரர். அவர், விளக்கமறியல் கைதியை குரூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது. சம்பத் மனம்பேரி கல்குகையில் ஒளிந்திருந்து நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பாரப்படுத்தப்பட்டார்.
ஆனால், மனம்பேரியிடம் எவ்வித போதைபொருளோ, ஆயுதங்களோ கைப்பற்றப்படவில்லை. அதன் பின்னணி இப்போது ஏன் என்று தெரிவருகிறதல்லவா, பின்னர் மூன்று பக்க 'பீ' அறிக்கை ஒன்றை தயாரித்து ஏமால் பிரிசாந்த வலஸ்முல்ல நீதிமன்றத்தில் மனம்பேரியை முன்னிலை செய்யப்பட்ட பின்னர் சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஓலுகலவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதன் பின் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் நாடே அறியும். இச்சந்தர்ப்பத்தில் கைத்தொலைபேசி பாவிக்கவில்லை என்கிறார். அது அப்பட்டமான பொய்யாகும்.
போதை பொருள் தடுப்பு பிரிவில் இருக்கும் போது மனம்பேரியின் தொலைபேசி செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் அரசியல்வாதிகளிடம் மனம்பேரி பேசியது அனைத்தும் இருந்துள்ளது.
நெவில் வன்னியாராச்சி - ஏமால் பிரிசாந்த
ஆனால், அவற்றை குறித்த தொலைபேசி நிறுவனத்திடம் உரையாடி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் விசாரணைகள் தாமதிக்கப்படலாம். அதே அவர்களின் தேவையாக இருந்திருக்கும். நாமல் ராஜபக்சவின் ஆட்கள் இவ்வளவு கம்பீரமாக பேசுவது அதனால் தான் ஆகும்.
நெவில் வன்னியாராச்சியும் ஏமால் பிரிசாந்தவும் உறவினர்கள் என்று பொலிஸார் அனைவரும் அறிவர். தினேஸ் சாப்பட்டரின் உயிர் மாய்ப்பு சம்பவத்தை அப்போது புலனாய்வு பிரிவில் இருந்த ஏமால் பிரசாந்தவே விசாரணை நடத்தியுள்ளார்.
அச்சம்பவத்தின் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாதவருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் ஆணையாளர் பதவி கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவை எவ்வாறு நடந்துள்ளன? நெவில் வன்னியாரச்சி அழுத்தம் பொலிஸில் அதிகமாக இருந்துள்ளது.
மகிந்தவுக்கு எந்த தொலைபேசி வந்தாலும் அவரே பதிலளிப்பது வழமையாம். மகிந்த வீட்டின் செல்லப்பிள்ளையாக இருந்தவர்தான் நெவில். இவற்றின் இணைப்பு தான் பல சம்பவங்களுக்கு காரணமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 9 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
