பெருந்திரளாகத் வீதிகளில் இறங்கி இந்தப் பணியை முடித்துவிடுங்கள்...பெஞ்சமின் நெதன்யாகுவின் கோரிக்கை
ஈரான் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக இது அமைந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
போர் பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வௌியிட்டுள்ளார்.
இராணுவ நடவடிக்கை
இந்த சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.
எனினும், அவர் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இன்றைய தினம் உயர்மட்டத் தலைவரிடமிருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தேவையான காலம் வரை தொடரும் என்று குறிப்பிட்ட இஸ்ரேலியப் பிரதமர், இஸ்ரேலின் முன்னணி கட்டளைப்பிரிவு வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலிய குடிமக்களைக் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரான் மக்களுக்கு உரையாற்றிய நெதன்யாகு, இந்தத் தாக்குதல்கள் அவர்கள் தாம் அனுபவித்து வரும் கொடுங்கோன்மையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள உதவும் என்று கூறினார்.
வரலாற்றுப் பணி
ஈரான் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக இது அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெருந்திரளாகத் வீதிகளில் இறங்கி இந்தப் பணியை முடித்துவிடுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் நீங்கள் ஒன்றிணைவதற்கு இதுவே சரியான நேரம் என்றும், ஒரு வரலாற்றுப் பணிக்காக ஒன்றுபடுங்கள் என்றும் அவர் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தலைவர் உயிருடன் இருப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ரோஹினி கொடுத்த பத்திரத்தில் கையெழுத்து போட போன மனோஜ், எப்படி தப்பித்தார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam