தெற்கு லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்த நெதன்யாகு உத்தரவு..! இஸ்ரேலில் காரசார விவாதம்
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவத்தின் தரைவழித் தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்துமாறு அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
தனது நாட்டின் உள்நாட்டு மக்களுக்குத் தனது இராணுவ பலத்தைக் காண்பிக்கும் நோக்கத்துடன், நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இஸ்ரேலிய இராணுவத்தின் தற்போதைய நகர்வுகள் மற்றும் உத்திகள் முழுமையாக வெளிவராத போதிலும், லெபனானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போஃபோர்ட் கோட்டையை இஸ்ரேல் மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
ங்கிருந்து தங்களது படைகளை விலக்கிக்கொள்ளப் போவதில்லை என்றும், இந்த பகுதியைத் தங்களது புதிய பாதுகாப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக மாற்ற இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதும் தற்போதைய நிலவரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
புதிய முயற்சியில் இறங்கிய இஸ்ரேல்
ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் புதிய எல்லைப் பகுதிகளைக் குறி வைத்து நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல்களையும், தொடர் ட்ரோன் தாக்குதல்களையும் முறியடிப்பதற்காகவே இந்த பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.

இருப்பினும், இஸ்ரேல் இராணுவத்தின் இந்தத் தரைவழி முன்னேற்ற நடவடிக்கை மூலம் மட்டும் ஹிஸ்புல்லாவின் அச்சுறுத்தல்களை முற்றிலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று இராணுவப் பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் ட்ரோன்களின் தொழில்நுட்பம் மற்றும் அவற்றைக் கையாளும் விதம் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரைவழித் தாக்குதல் நடவடிக்கை இஸ்ரேலின் இலக்கை அடையுமா இல்லையா என்ற கேள்வி, தற்போது இஸ்ரேல் நாட்டு மக்களுக்குள்ளேயே பெரும் ஏமாற்றத்தையும் கடுமையான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 18 மணி நேரம் முன்
சிறையில் கதிர்.. கண்விழித்த முத்துவேல் போலீசிடம் என்ன கூறினார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam