மத்தியகிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நெதன்யாகுவின் அறிவிப்பு
காசா பகுதியில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் "ஆரம்பம் மட்டுமே" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் "முழு அளவிலான தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது"என்றும், "தாக்குதல்களுக்கு மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹமாஸுக்குச் சொந்தமான "பயங்கரவாத இலக்குகள்" என்று அவர் அழைக்கும் இடங்களில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் பாரிய தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர், இஸ்ரேலிய பிரதமர் நேற்று இரவு ஊடகங்களுக்கு இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
400 க்கும் மேற்பட்டோர் பலி
தாக்குதல்களில் 400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
ஜனவரி 19 ஆம் திகதி போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து காசா பகுதியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக இருக்கும் எகிப்து, காசா பகுதியில் நடந்த தாக்குதல்களைக் கண்டித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தத் தொடர் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் "தெளிவான மீறல்" என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தமீம் கல்லாஃப் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |