அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி, இஸ்ரேல், ஹமாஸ் போர் தொடங்கியது முதல் இஸ்ரேலுக்கு 4-வது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதே அமைதி திரும்புவதற்கான ஒரே வழி என வலியுறுத்தினார்.
ஆபத்தை விளைவிக்கும் நிலைப்பாடு
அதனை ஏற்க மறுத்த நேதன்யாஹு, பாலஸ்தீனம் என ஒன்று இருந்தால் அது, யூதர்களுக்கென தனி நாடாக இஸ்ரேல் இருப்பதற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இஸ்ரேலின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க கூடிய எந்த நிலைப்பாட்டையும் எங்கள் மீது திணிக்க முயல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை போர்நிறுத்தம் அல்லது தற்காலிக போர்நிறுத்தம் குறித்து ஐ.நா. சபை, மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல உலக நாடுகளின் கோரிக்கைகளையும் இஸ்ரேல் புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
