ட்ரம்புடன் எந்தப் பிளவும் இல்லை - நெதன்யாகு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் தனக்கும் இடையில் இரான் விவகாரத்தில் எந்தவித பிளவோ கருத்து வேறுபாடோ இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களும் ஒரே இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய நெதன்யாகு, இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
எங்களுக்குள் எந்தப் பிளவும் இருப்பதாக நான் நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அவர் அமெரிக்காவுக்கு நல்லது என்னவோ அதைத்தான் செய்கிறார். நான் இஸ்ரேலின் பிரதமர்; உலகின் ஒரே யூத நாடான இஸ்ரேலுக்கு நல்லது என்னவோ அதைத்தான் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
99 சதவீத நேரங்களில் நாங்கள் ஒரே கருத்தில்தான் இருக்கிறோம். ஆனால் எந்தக் குடும்பத்திலும், நெருங்கிய நட்பிலும் இருப்பது போல சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அவற்றை வெளிப்படையாக விவாதித்து, பெரும்பாலும் தீர்த்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வார திங்கட்கிழமைக்குள் வாஷிங்டனுக்கு பயணம் செய்து டிரம்பை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நெதன்யாகு, ஈரானிடம் அணு ஆயுதமோ அல்லது அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனோ இருக்கக் கூடாது என்பதே எங்கள் இருவரின் பொதுவான இலக்கு" என்று தெரிவித்தார்.
தற்போது டிரம்ப், 60 நாள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீண்டகால போர் நிறுத்த ஒப்பந்தமாக மாற்றும் நோக்கில் இரானுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்.
அதேவேளை, தேவையானால் இரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கத் தயாராக இருப்பதாக நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து கேட்கப்பட்டபோது, "இறுதி முடிவு இன்னும் வரவில்லை. அது முடிந்த பிறகே அதனை மதிப்பிட முடியும். ஆனால் மிக முக்கியமானது, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதில் இருவருக்கும் ஒரே நோக்கம் உள்ளது," என அவர் கூறியுள்ளார்.
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri