போர்நிறுத்த பேச்சுவார்த்தை: நெதன்யாகு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
காசாவில் நிலவும் போர் பதற்றத்தை கட்டுப்படுத்த நடத்தப்படும் சமாதான பேச்சுவார்த்தையில் பங்குபற்ற இஸ்ரேலிய தரப்புக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அனுமதி வழங்கியுள்ளார்.
குறித்த பேச்சுவார்தையானது, கட்டார் , எகிப்து மற்றும் அமெரிக்காவின் தலையீட்டில் இடம்பெற்று வருகிறது.
நெதன்யாகுவின் அறிவிப்பு
இந்நிலையில், இஸ்ரேலும் ஹமாஸும் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பங்குபற்ற தாமதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தோஹாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடர மொசாட், [இஸ்ரேலிய இராணுவம்] மற்றும் ஐஎஸ்ஏ [உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனம்] ஆகியவற்றின் தொழில்முறை அளவிலான பிரதிநிதிகளுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |