சதுப்பு நிலங்களை உற்பத்திகளுக்குப் பயன்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை
சதுப்பு நிலங்களை பயனுள்ள உற்பத்திகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இது குறித்து பொதுநலவாய பணிப்பாளர் நாயகம் பெற்றிசியா ஸ்கொட்லாண்டுடன் கொழும்பில் சுற்றாடல் அமைச்சர் நஸீர்அஹமட் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
சதுப்பு நிலங்களை பயனுள்ள உற்பத்திகளுக்குப் பயன்படுத்தும் இலங்கையின் திட்டத்தைப் பாராட்டிய பெற்றீசியா ஸ்கொட்லாண்ட், இத்துறையில் இருநூறு அரச ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்க உதவுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

வேலைத்திட்டம் ஆரம்பம்
மேலும், இத்திட்டத்தில், இலங்கை சிறந்த வெற்றியாளராக வளர வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் பயன்பாட்டுக்கு உதவாதுள்ள சதுப்பு நிலங்களை பயனுள்ள உற்பத்திகளுக்குப் பயன்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெளிவூட்டும் வேலைத்திட்டங்களை அமைச்சு ஆரம்பித்துள்ளது. இவ்வாறான நிலங்களை அடையாளங்காணும் பணிகளும் ஆரம்பிக்கப்படுமென, சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் இதன்போது குறிப்பிட்டார்.
அமைச்சில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில்ஜெயசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri