அமெரிக்காவில் எடுக்கப்பட்ட வரலாற்று முடிவு! சூடுபிடிக்கும் ரஷ்ய - உக்ரைன் விவகாரம்
உக்ரைனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கத் தயார் என உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப், அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது ஒரு வரலாற்று முடிவு என செலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, நாளை திங்கட்கிழமையன்று சந்திக்கவுள்ளார்.
ஐரோப்பாவின் பங்கேற்பு
குறித்த சந்திப்பில், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, பாதுகாப்பு உத்தரவாதங்கள் உண்மையில் மிகவும் நடைமுறைக்குரியதாக இருக்க வேண்டும் என ஸ்டீவ் விட்காஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனுக்கு நிலம், வான்வழி மற்றும் கடல் வழியாக பாதுகாப்பு ஐரோப்பாவின் பங்கேற்புடன் உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் மூலம் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
