ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கான பேச்சுவார்த்தை
உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைய ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனின் பெரும் பகுதியை பிடித்துக் கொள்ள நினைக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
ஒத்திவைக்கப்பட்டிருந்த கோரிக்கை
இந்நிலையில் தற்போது உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள உக்ரைன், தங்களை ஐரோப்பிய யூனியனுடன் சேர்த்துக் கொள்ள கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும் இந்த கோரிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
உக்ரைனை தவிர்த்து மால்டோ நாடும் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையில் சரக்கு போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும்.
வரிவிதிப்பு, சுற்றுச்சூழல், நீதித்துறை உரிமை, பாதுகாப்பு போன்றவற்றில் ஐரோப்பிய யூனியனின் 35 கொள்கைகளுக்கு ஏற்ப அதில் உள்ள நாடுகள் தங்களுடைய சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |