துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் பால் மாவை திருப்பி அனுப்புவது குறித்து பேச்சுவார்த்தை
துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் பால் மாவை திருப்பி அனுப்பி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் லக்ஸ்மன் விரசூரிய (Laxman Virasooriya) தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் 360,000 கிலோ எடையுடைய பால் மா தேங்கிக் கிடப்பதாகவும் இவற்றை விடுவிப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் வர்த்தக வங்கிகளுக்கு டொலர்களை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தேங்கிக்கிடக்கும் பால் மாவை வேறும் நாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பது குறித்து பால் மா ஏற்றுமதி செய்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பால் மா கெட்டுப் போகக் கூடிய அபாயம் காணப்படுவதனால் அதனை வேறும் ஓர் நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வாறு செய்தால் நாட்டில் பால் மாவிற்கான தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக வங்கிகளுடன் இன்று பேசிய போது இன்னமும் டொலர்கள் கிடைக்கவில்லை என வங்கிகள் கூறியதாகத் தெரிவித்துள்ளார். வங்கியில் பணத்தை வைப்புச் செய்து விட்டு டொலர் கிடைக்கும் வரையில் காத்திருக்க நேரிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு டொலரை 238 ரூவாவிற்கு கொள்வனவு செய்ய சில இறக்குமதியாளர்கள் யோசனை முன்வைத்த போதிலும் அவ்வாறு செய்தால் ஒரு கிலோ பால் மாவிற்கு 144 ரூபா மேலதிகமாக செலுத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
