நீர்கொழும்பு சிறை வாயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்..! சற்றுமுன்னர் நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட தகவல்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது விசேட அதிரடிப்படையின் தொப்பியை அணிந்து பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிண்ணனி
குறித்த நபர் யார், எதற்காக இவ்வாறு செயற்பட்டார், இதன் பிண்ணனி என்ன என்பது தொடர்பில் அரசாங்கம் விளக்கம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் பின்னணி மற்றும் உண்மையான காரணங்களை மக்கள் அறியும் வகையில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan