நீர்கொழும்பில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குப் பிறகு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளுக்கு எதிராக எந்தவிதமான துன்புறுத்தலும் செய்யப்படவில்லை என்று மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அங்கிருந்த கைதிகள் இலங்கையின் பல்வேறு பாகங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட பல்வேறு கைதிகளுக்கு சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
அதனையடுத்து சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையொன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் தற்போதைக்கு கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் நீர்கொழும்பில் இருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளுக்கு எதிராக எந்தவிதமான துன்புறுத்தலும் செய்யப்படவில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.

கைதிகள் இடமாற்றம்
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்ட பூசா, அகுனுகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை உள்ளிட்ட பல சிறைச்சாலைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கூடுதலாக, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மற்ற சிறைச்சாலைகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது.
மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல் - யோசிதவை காட்டிக்கொடுத்த முன்னாள் காதலி - பல தகவல்கள் அம்பலம்
YOU MAY LIKE THIS VIDEO
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam