சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடூரம்! காணாமல்போன இரு T-56 துப்பாக்கிகள் : வெளிவந்துள்ள உண்மைக் கதை...

Sri Lanka Police Negombo Department of Prisons Sri Lanka Prison CCD - Colombo Crime Division
By Kanthan Jul 07, 2026 12:26 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையின் உள்ளக மோதல்கள் காரணமாக, இரு தரப்பிலும் மிகவும் கவலைக்கிடமான முறையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதில் சிறைக்கைதிகள் 19 பேரும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் உயிரிழந்த இருவருடன் சேர்த்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இந்த மோதலில் சிறைச்சாலை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சிறைக் கைதிகள் - மகனை இழந்து கதறி அழும் தாய்

கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சிறைக் கைதிகள் - மகனை இழந்து கதறி அழும் தாய்

சிறைச்சாலை நிர்வாகம் 

சிறைச்சாலை நிர்வாகம் என்பது சாதாரணமான ஒரு நிர்வாகம் அல்ல. அவர்கள் எந்தவித ஆயுதங்களும் இன்றி, வெறும் வாய்வார்த்தையினாலேயே கைதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

அதனால்தான் கைதிகள் பலரும் இவர்களை "எங்கள் அதிகாரிகள்" (அபே மஹத்துரு) என்று அழைக்கிறார்கள். ஆனால் இன்று அந்த அதிகாரிகளும் அடித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை விசேட பாதுகாப்பு அதிகாரிகள் சிலரை கைதிகள் தூக்கி சென்று மலசல கூடத்திலுள்ள கொமட்டில் முகத்தை புதைத்து பொல்லுகள் மற்றும் கைகளால் தாக்கி கால்களால் உதைத்தே கொன்றுள்ளனர்.

மேலும், உள்ளே இருக்கும் கதவின் அருகே இருந்த ஒரு சிலைச்சாலை அதிகாரியை துக்கி சென்று ஒரு அறையில் போட்டு தலையில் மிக மனிதாபிமானம் அற்ற முறையில் காலால் உதைத்தே கொலை செய்துள்ளனர்.

சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடூரம்! காணாமல்போன இரு T-56 துப்பாக்கிகள் : வெளிவந்துள்ள உண்மைக் கதை... | Negombo Prison Clash

இந்தச் சம்பவத்தின் போது இரண்டு T-56 ரக துப்பாக்கிகள் கைதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளன. சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஜன்னல் வழியாகத் துப்பாக்கியை நீட்டும் காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டன.

உண்மையில், கைதிகள் T-56 துப்பாக்கியை ஜன்னல் வழியாக வெளியே நீட்டி பாதுகாப்புப் பிரிவினர் மீது சுட முயன்ற போதே, தடியால் அடித்து கைதிகள் தடுக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த மோதலின் இறுதியில் 7 அதிகாரிகள் மிகக் கொடூரமான மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். தற்போது வரை இரண்டு T-56 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளன. இந்தச் சம்பவத்தால் சிறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியில் திகைத்துள்ளனர்.

சம்பவத்தின் உண்மைக் கதை

இந்தச் சம்பவத்தின் உண்மைக் கதை என்னவென்றால், நேற்று முன்தினம் இந்த மோதல் ஆரம்பமானது போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் தொடர்பான பிரச்சினையினாலே ஆகும்.

சிறைச்சாலையின் உட்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் "கடுல்லகம சுரேஷ்" என்ற நபர் பற்றிய தகவல்களை கைதிகள் சிலர் அதிகாரிகளுக்கு வழங்கியமையே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்தது.

அத்துடன் சிறைச்சாலையின் உட்பகுதியில் உள்ள மருத்துவமனை உடைக்கப்பட்டு, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகள், பரசிட்டமோல் உட்பட பல்வேறு வகையான மருந்துகள் கைதிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடூரம்! காணாமல்போன இரு T-56 துப்பாக்கிகள் : வெளிவந்துள்ள உண்மைக் கதை... | Negombo Prison Clash

நேற்று முன்தினம் இரவோடு இரவாக விசேட அதிரடிப்படை (STF) மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

அதிகாரிகள் வெறும் பேச்சுவார்த்தை மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்தியதை அடுத்து, நள்ளிரவு 12:45 மணியளவில் கூரையில் இருந்த கைதிகள் அனைவரும் கீழே இறங்கி தத்தமது அறைகளுக்குச் சென்றுள்ளனர்.

கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. அவ்வாறானதொரு சூழ்நிலையில், கைதிகள் கீழே இறங்கியதும் அவர்களை மீண்டும் பாதுகாப்பான கூண்டுகளுக்குள் அடைக்கவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஏனெனில், ஏற்கனவே எதிர் தரப்பைச் சேர்ந்த இருவர் உயிரிழந்திருந்த நிலையில், தாக்குதல் நடத்திய குழுவினரும் சுதந்திரமாகவே உலா வந்தனர்.

அதிகாலை 2-3 மணியளவில் பசி காரணமாக அவர்கள் கீழே வந்து, சிறைச்சாலை மைதானத்தின் ஆங்காங்கே உறங்கத் தொடங்கினர்.நேற்றுக் காலை நிலவரப்படி, நிலைமை சுமுகமாகிவிட்டதாகக் கருதிய சிறை அதிகாரிகள், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகளை வெளியே அனுப்பவும், கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்களுக்கு அனுமதி வழங்கவும் தயாராகிக் கொண்டிருந்தனர்.

கதவை உடைத்த கைதிகள்

சிறைச்சாலையில் உட்புறக் கதவு, வெளிப்புறக் கதவு என இரண்டு கதவுகள் உள்ளன. அவற்றிற்கு இடையே பாதுகாப்புக்கான விசேட பிரிவு (Special Unit) நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இரு குழுவினருக்கும் உள்ளே எரிந்து கொண்டிருந்த பகை மீண்டும் ஒரு கொடூர மோதலாக வெடித்தது. அப்போது கைதிகள் உட்புறக் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மோதலில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில், சிறைச்சாலையின் விசேட பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளை அவர்கள் தாக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று முன்திகம் இரவே இந்தச் சம்பவத்தை முழுமையாகத் தீர்த்து, கைதிகளைக் கூண்டுகளுக்குள் அடைத்திருக்க வேண்டும்.

கைதிகளை சுதந்திரமாக இருக்க அனுமதித்ததே இந்த வன்முறை மீண்டும் வெடிப்பதற்குக் காரணம் என்பதை சிறைச்சாலை நிர்வாகம் உணர்ந்திருக்க வேண்டும்.

சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடூரம்! காணாமல்போன இரு T-56 துப்பாக்கிகள் : வெளிவந்துள்ள உண்மைக் கதை... | Negombo Prison Clash

தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. தாக்குதல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த நாட்களில் சிறை அதிகாரிகளுக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருந்ததால், பலர் விடுமுறையில் சென்றுள்ளனர்.இதனால் சிறையை நிர்வகிக்கக் குறைந்தளவிலான அதிகாரிகளே இருந்துள்ளனர்.

900 பேர் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு சிறைச்சாலையில் 2000க்கும் அதிகமானோரை அடைத்து வைத்திருந்ததே இந்த மோதல் இவ்வளவு விரைவாகப் பரவுவதற்குக் காரணமாகும்.

பரபரப்பை ஏற்படுத்தி வரும் சிறைச்சாலை வன்முறை.. நீதிமன்றிடம் பெறப்பட்டுள்ள விசேட உத்தரவு

பரபரப்பை ஏற்படுத்தி வரும் சிறைச்சாலை வன்முறை.. நீதிமன்றிடம் பெறப்பட்டுள்ள விசேட உத்தரவு

 

you may like this..


மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US