நீர்கொழும்பு சிறை மோதல் தொடர்பில் விசாரிக்க இருவேறு குழுக்கள்..! 600 இற்கும் மேற்பட்ட கைதிகளை இடமாற்ற முடிவு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட சொத்து சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஒரு விசேட குழுவும், மோதல் சம்பவம் குறித்து தனியானதொரு விசாரணையை முன்னெடுப்பதற்காகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.
அடுத்தகட்ட நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மேலும் 600 இற்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றை மையமாகக்கொண்டு கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த மோதலின் போது 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri