சர்ச்சைகளுக்கு மத்தியில் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய உற்சவம் ஆரம்பம் (Photos)
முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று வருகின்றது.
இந்த உற்சவம் இன்று (04.08.2023) காலை ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு உற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதம குருவாக திருஞானசம்பந்த குருக்கள், ஆலயபூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் விஷேட அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து விநாயக பெருமானுக்கும் பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெற்றது.
இதனையடுத்து விபூதி பிரசாதம் வழங்குதலும், களாஞ்சி பிரசாதம் வழங்குதலும் இறுதியாக அன்னதானமும் வழங்கப்பட்டது.
சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரை
இன்று மாலை கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆலய பூசகரால் பாரம்பரிய முறைப்படி பூசை வழிபாடுகள் இடம்பெற்று நாளை (05.08.2023) அதிகாலை 4 மணியளவில் பரிகலம் வழிவிடுதல் நிகழ்வு இடம்பெற்று பொங்கல் உற்சவம் நிறைவுறும்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து சட்ட விரோதமாக பௌத்த விகாரை அமைத்து பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்டு வந்திருந்தது.
இருப்பினும் தற்போது குறித்த ஆலயத்தின் வழிபாடுகள் தொடர்ச்சியாக ஆலய
நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        