திருகோணமலை பொது வைத்தியசாலையில் வேம்பு மரம் வீழ்ந்தது-நடைபாதை கட்டடம் முற்றாக சேதம்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் வேம்பு மரமொன்று வீழ்ந்ததில் வாட்டுக்கு செல்லும் நடைபாதை முற்றாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இவ்வனர்த்தம் நேற்றிரவு(22) இடம்பெற்றுள்ளது.
காற்றுடன் கூடிய மழையின் காரணமாகத் திருகோணமலை வைத்தியசாலையின் வளாகத்தில் நின்ற வேம்பு மரம் சரிந்து வீழ்ந்ததில் வைத்தியசாலையின் நடைபாதைக் கட்டடம் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், உயிர்களுக்குச் சேதம் ஏற்படவில்லையெனவும் தெரியவருகின்றது.
இதன்போது கட்டத்தின் கட்டுமானத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் வெளிவந்துள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிர்மாணப்பணிகளில் பல மோசடிகள் இடம்பெற்று வருவதாக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களினால் முறைப்பாடுகள் தெரிவிக்கின்ற பட்சத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் ஒப்பந்தக்காரர்களுக்குச் சார்பாகச் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேம்பு மரம் வீழ்ந்த தூண் பகுதியில் குறிப்பாகத் தூண்கள் எவையும் கம்பி வைக்காமலேயே கட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.










6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
