வருமான வரியை அதிகரிக்க முழு முயற்சி எடுக்க வேண்டும்: சித்தார்த்தன்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Kajinthan Sep 23, 2022 08:20 AM GMT
Report

ஒரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு முன்வைக்காவிட்டால் இந்த பொருளாதார வளர்ச்சியை பற்றி பேசுவதென்பது ஒரு கண் துடைப்பாகவே இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை (21.09.2022)  நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வருமான வரியை அதிகரிக்க முழு முயற்சி எடுக்க வேண்டும்: சித்தார்த்தன் | Need To Increase Income Tax

வரிகளை உயர்த்தல்

அவர் மேலும் கூறுகையில், “அநேகமாக வருமானத்தை அதிகரிக்கின்ற விடயங்கள் வரிகளை உயர்த்துவது சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். வரிகளை உயர்த்துகின்ற போது சாதாரண ஏழை மக்கள் பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டும்.

அநேகமாக மறைமுக வரிகள் என்று சொல்லப்படக்கூடிய வற் (Vat) வரிகள் போன்றவை நேரடியாக மக்களின் அன்றாட தேவைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் ஒரு வேளை உணவிற்கு கஷ்டப்படுகின்ற போது விலைகளை உயர்த்தும் வகையில் இந்த வரிகளை உயர்த்த கூடாது.

வருமான வரிகளை உயர்த்துவதற்கான முழுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும். அது சம்பந்தமாக மகிந்தானந்த மிக தெளிவாக பல விடயங்களை கூறியிருந்தார். அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வருமான வரியை அதிகரிக்க முழு முயற்சி எடுக்க வேண்டும்: சித்தார்த்தன் | Need To Increase Income Tax

இலஞ்ச ஊழல்

வருமானத்தை கூட்டுகின்ற அதே நேரத்தில் இலஞ்ச ஊழல் என்பது இன்று மிகவும் பெரும்பான்மையாக நடைபெறுகின்ற ஒரு விடயம். தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் நிச்சயமாக இந்த குற்றங்களை தடுக்க முடியும்.

நாங்கள் ஏற்கனவே வங்குரோத்து நாடாக உலக நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் இது இன்னும் கடுமையான நிலைமையை உருவாக்கும்.

நியாயமான தீர்வு

ஒரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு முன்வைக்காவிட்டால் இந்த பொருளாதார வளர்ச்சியை பற்றி பேசுவதென்பது ஒரு கண் துடைப்பாகவே இருக்கும். தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் என அனைவருமாக சேர்ந்து  பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் இந்த நாட்டை ஒரு சுபீட்சத்தை நோக்கி கொண்டுபோக முடியும். ஆகக்குறைந்தது இந்த வங்குரோத்து நிலையிலிருந்தாவது முதலில் மீட்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US