பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்பும் சிந்தனை எவருக்கும் இல்லை: த.சித்தார்த்தன்(Video)

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Shan Jul 16, 2022 05:29 PM GMT
Report

“தென்னிலங்கை அரசியல்வாதிகள் யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்று போட்டியிடுகின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை.” என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா கோவில் குளத்தில் இன்று (16) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 33வது வீரமக்கள் தினத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலமை


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய மக்களை பொறுத்தவரையில் இந்த பொருளாதார நிலை என்பது புதிய விடயமல்ல. இது ஏற்கனவே எமது மக்கள் அனுபவித்த விடயமாகும்.

எங்களுடைய மக்கள் நீண்ட காலமாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள்.

இன்று நாடானது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அடுத்த கட்டமாக என்ன நடக்குமோ? என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியமை மற்றும் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியமை என்பவற்றை போராட்டகாரர்கள் செய்து காட்டியுள்ளார்கள்.

பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்பும் சிந்தனை எவருக்கும் இல்லை: த.சித்தார்த்தன்(Video) | Rebuilding This Country Economically Siddharthan

சுதந்திரம் அடைந்தது தொடக்கம் இந்நாட்டை ஆண்டு வந்த அரசாங்கங்கள் பொருளாதார வளர்ச்சியிலோ அல்லது அனைத்து இனங்களும் ஒற்றுமையிலோ அக்கறை கொள்ளாது சிறுபான்மை இனங்களையும் தேசிய இனங்களையும் அடக்குவதிலேயே தங்களது முழுமையான கவனத்தை செலுத்தி வந்துள்ளார்கள்.

அதேபோன்று பல குடியேற்ற திட்டங்கள் மற்றும் பாராம்பரிய இந்து ஆலயங்கள் என்பவற்றில் பௌத்த சின்னங்கள் இருப்பதாக கூறி பௌத்த மயமாக்குவதற்கே தங்களது நேரத்தையும் நிதியையும் செலவிட்டு வந்தார்கள்.

இந்த நாட்டிலே ஏற்பட்ட நீண்ட கால யுத்தமானது நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக அழிக்கின்ற விடயமாகவே இருந்துள்ளது.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரு துளியேனும் சிந்திக்காது தொடர்ந்தும் ஆக்கிரமிப்பிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று கூட யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்ற போட்டியிடுக்கின்றனர். நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை.

இந்த நாட்டின் மீது தமிழ் பிரதிநிதிகள் காட்டுகின்ற அக்கறை கூட தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் நிலைப்பாடு 

பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்பும் சிந்தனை எவருக்கும் இல்லை: த.சித்தார்த்தன்(Video) | Rebuilding This Country Economically Siddharthan

தமிழ் அரசியல்வாதிகளான நாங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்று எப்பொழுதும் கூறி வருகின்றோம்.

ஆனால் அவர்கள் ஜனாதிபதி பதவிக்கும் பிரதமர் பதவிக்கும் போட்டியிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு என்ன செய்ய இருக்கின்றது என பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.

போட்டியாளர்கள் யார்? என்பதை பார்த்த பின்பே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தீர்மானத்திற்கு வரும். அது என்ன தீர்மானம் என்பதை தற்போது கூற முடியாது.

தமிழ் மக்களிற்கு சாதகமான முடிவு ஒன்றினையே நாங்கள் எமது தீர்மானமாக எடுப்போம்.

சிறையில் இருக்க கூடிய அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற விடயங்களை அவர்களிடம் முன்வைப்போம்.

இவற்றை எல்லாம் யார் எந்த வேட்பாளர் எங்களுக்கு சாதகமாக செயற்படுவார் என்பதை ஆராய்ந்த பின்னரே எமது ஆதரவை வழங்க முடியும்.

இதற்காக ஜனாதிபதி வேட்பாளர் அறிவித்த பின்னர்  தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக கூடி சரியான முடிவை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலி

சுன்னாகம், திருச்சி, India, Brest, France

28 Oct, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, Untersiggenthal, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், Frankfurt, Germany

27 Nov, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 2ம் வட்டாரம், கொழும்பு 6

09 Dec, 2023
மரண அறிவித்தல்

நெல்லியடி, New Malden, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

23 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, புலோலி தெற்கு, கொழும்பு

28 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US