பலரையும் சோகத்தில் ஆழ்த்திய நெடுந்தீவு படுகொலை! உயிரிழந்த ஐவரின் இறுதிக் கிரியை தொடர்பில் வெளியான தகவல்(Video)
நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரில் கணவன் மனைவி உட்பட மூன்று பேரின் இறுதிக் கிரியைகள் நாளையும் (26.04.2023) ஏனைய இருவரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமையும் (27.04.2023) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரில் முல்லைத்தீவு செல்வபுரம் வடக்கு வவுணிக்குளத்தைச் சேர்ந்த நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவி கண்மணியம்மா பூமனி ஆகியோரது சடலங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது சகோதரரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறுதிக் கிரியைகள் நாளை (26-042023) பகல் 10 மணிக்கு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவர்களுடன் படுகொலை செய்யப்பட்ட முல்லைத்தீவை சேர்ந்த சுப்பிரமணியம் மகாதேவாவின் சடலம் கிளிநொச்சி கணேசபுரத்திலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நேற்று (24-04-2023) இரவு முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிக்கிரியைகள் நாளை (26-04-2023) பகல் 10 மணிக்கு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய இருவரது சடலங்களும் யாழ்ப்பாணத்திலுள்ள மலர்ச் சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளைய தினம் (26.04.2023) யாழ்பாணத்திலுள்ள அவர்களது உறவினர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை மறுதினம் வியாழக்கிழமை இறுதிக்கிரியைகள் நநடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணொளி: கஜிந்தன்