நெடுந்தீவு இளைஞனை காணவில்லை! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை(Photo)
நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவரை காணவில்லை என தெரிவித்து நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி வீட்டிலிருந்து மதிய உணவினை உட்கொண்டு விட்டு சென்ற பின்னரே குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளார்.
27 வயதான தம்பிப்பிள்ளை விதுசன் எனும் மனநலம் குன்றிய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிஸாரின் கோரிக்கை
இதேவேளை 14 ஆம் வட்டாரத்தில் அன்றைய தினம் கட்டப்பட்டிருந்த தெப்பம் ஒன்றும் காணாமல் போயுள்ளது.
குறித்த தெப்பத்தில் இளைஞர் தீவினை விட்டு வெளியேறியிருக்ககூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கடற்படை ஏனைய பொலிஸ் நிலையங்கள் என அனைத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைப்பவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்கும்படியும் நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
