உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழ. நெடுமாறனை நேரில் சென்று பார்வையிட்ட மு.க. ஸ்டாலின்
இந்தியாவின், தமிழ்நாடு மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இல்லத்திற்கு நேரில் சென்று நலன் விசாரித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பழ.நெடுமாறனை சந்தித்தது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், முகப்புத்தக பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
விசேட சந்திப்பு
மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உடல் நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையில் இருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன்.

அப்போது போது ஒரே இடத்தில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டோம்.
மேலும் பழ.நெடுமாறன் விரைந்து நலம் பெற விழைகிறேன்." என தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening