நாட்டின் பல பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்(Photos)

Kilinochchi Mullaitivu Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Keethan Nov 01, 2023 11:36 AM GMT
Report

நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளின் சுகாதார ஊழியர்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தொழிற்சங்க போராட்டம் இன்று (01.11.2023) நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றிருந்தது.

அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களும் காலை ஏழு மணி தொடக்கம் 12:00 மணிவரை தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்


முல்லை தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு, வெலிஓயா, ஒட்டிசுட்டான், மல்லாவி, மாங்குளம், உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு சேவை ஆற்றி வரும் அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள் அனைவரும் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

ஊழியர்களின் கோரிக்கை

சுகாதார ஊழியர்களின் கோரிக்கையாக சுகாதார ஊழியர்களாகள் தற்போது வாழ்க்கைக்கு முடியாத நிலமையொன்று உருவாக்கியுள்ளது.

1. சுகாதார ஊழியர்களுக்காக 5 நாள் வேலைத்திட்டத்தை வழங்கல். (வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள்)

2. மத்திய அரசின் மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களிற்காக மேலதிக நேர கொடுப்பனவு / விடுமுறை தின சம்பள வரையறையை நீக்குதல்.

நாட்டின் பல பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்(Photos) | Union Strike Of Health Workers

3. மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக ரேட் முறையை வழங்குதல் (இதுவரையிலும் வைத்தியர், தாதியர், இடை நிலை வைத்தியர் மற்றும் துணை வைத்தியர் சேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.)

4. தற்போது வழங்கப்படும் ரூபா.1000/- விசேட கொடுப்பனவு ரூபா.7000/- வரை அதிகரித்துக்கொள்வது, சீருடை கொடுப்பனவு ரூபா.15000/- வரை அதிகரித்துக்கொள்வது.

கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்...! முடக்கப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்து: பலர் கைது

கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்...! முடக்கப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்து: பலர் கைது

5. முறையான இடமாற்ற முறையொன்று மற்றும் இடமாற்றம் விரைவாக வழங்குதல்.

6. ஓய்வூதிய சம்பளத்தை உறுதிப்படுத்துதல்.

7. ஊழியர் பற்றாக்குறையின் போது ஆட்சேர்ப்பு செய்தல் / அனைத்து பதவி உயர்வுகள் வழங்குவதுதொடர்பாக முன் நடவடிக்கைகள் எடுத்தல்.

நாட்டின் பல பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்(Photos) | Union Strike Of Health Workers

8. மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்வதல் மற்றும் சத்திரசிகிச்சைகள் வழமைப் போல் நடாத்துதல்.

9. நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதற்காக ரூபா.20,000/- இனால் சம்பளத்தை அதிகரித்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர் கொழும்பில் கைது

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர் கொழும்பில் கைது


கிளிநொச்சி

இன்று (01.11.2023)  சம்பள உயர்வு கோரி சுகாதார ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம் ஒன்றை கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக மேற்கொண்டு இருந்தனர்.

சம்பளம் 2016 இன் பின் அதிகரிக்கப்படவில்லை எள்பதோடு, கிழமையினுல் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று காலை 7.00 மணி தொடக்கம் பி.ப 12.00 வரை சுகாதார சேவை தொழிற் சங்க கூட்டணியாக போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

நாட்டின் பல பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்(Photos) | Union Strike Of Health Workers

செய்தி - எரிமலை

யாழ்ப்பாணம்

சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை  இன்று (01.11.2023 ) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன்பாக மேற்கொண்டு இருந்தனர்.

பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று காலை 7.00 மணி தொடக்கம் பி.ப 12.00 வரை சுகாதார சேவை தொழிற் சங்க கூட்டணியாக போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

செய்தி - எரிமலை

சாவகச்சேரி

பொது சுகாதாரப் பணியாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்களும் இன்று (01.11.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் பல பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்(Photos) | Union Strike Of Health Workers

வவுனியா

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றையதினம் (01.11.2023) காலை 10.30 மணியளவில் வைத்தியசாலையின் ஊழியர் வாயிலின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் பல பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்(Photos) | Union Strike Of Health Workers

செய்தி - திலீபன்

மன்னார்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று (01.10.2023) காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

நாட்டின் பல பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்(Photos) | Union Strike Of Health Workers

போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள் தமக்கு வாரத்தில் 5 நாள் வேலையை வழங்க வேண்டும், மேலதிக நேர கொடுப்பணவை வரையறை இன்றி வழங்க வேண்டும், மின்சார கட்டண அதிகரிப்பை ரத்து செய், மருந்து தட்டுப்பாட்டை உடனடியாக ரத்து செய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்திருந்தனர்.

இலங்கை சுங்கத் துறைக்கு கிடைத்துள்ள அதியுச்ச வருமானம்

இலங்கை சுங்கத் துறைக்கு கிடைத்துள்ள அதியுச்ச வருமானம்

யாழில் ஆலயம் செல்லும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்...! விடுக்கப்படும் எச்சரிக்கை

யாழில் ஆலயம் செல்லும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்...! விடுக்கப்படும் எச்சரிக்கை

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US