தேர்தல் போட்டியில் சமனிலை பேணப்படுவது அவசியம் என வலியுறுத்து
தேர்தல் போட்டியில் சமனிலை பேணப்படுவது அவசியம் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் (CMEV) பணிப்பாளர் விக்ரர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவீனங்களை முன்னிறுத்திய தேர்தல் பிரசாரங்கள் அதன் மதிப்பீடு செய்யப்பட செலவீனங்கள் தொடர்பில் கண்காணிப்பு தொடர்பிலான மாவட்ட மட்ட தேர்தலுடன் தொடர்புடையவர்களுடனான கலந்துரையாடல் இன்று (10) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதன்போது, கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கால வன்முறை
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நாட்டில் அமைகின்ற அரசுகளே மக்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றது. ஆனால் அந்த அரசையும் அரசியலையும் தீர்மானிப்பது மக்களாக இருக்கின்றனர்.
தேர்தலின் முக்கிய பங்குதாரரான வாக்காளர்களுக்கும், தேர்தல் திணைக்களம், பொலிஸார், கண்காணிப்பு அதிகாரிகள், இடையான தகவல் பரிமாற்றம் என்பது ஒவ்வொரு தேர்தலிலும் பலவகையான தாக்கங்களை செலுத்திவருகின்றன. இதை ஒரு முறையான பொறிமுறைக்குள் கொண்டு வருவது அவசியமாகும்.
மற்றும் தேர்தல்கால வன்முறைகளை இனங்காண்டு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கல். அவற்றை கட்டுப்படுத்தல், தேர்தல் செலவீனங்களை கையாளுதல் உள்ளிட்ட விடயங்களும் தற்போது பேசுபொருளாக இருக்கின்றது.
இதேநேரம் வரவுள்ள தேர்தல்களினல் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமானதாக இருக்கும் என்பது ஒரு பொதுக்கருத்தாக இருக்கின்றது.
இந்த தாக்கம் தனி நபரையோ கட்சிகளையோ பாதிப்பதாக அமையுமானால் அதை எவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைக்கு எவ்வாறு செல்வது என்பதும் பலருக்கு கடினமானதொன்றாகவே இருக்கின்றது.
அதனடிப்படையில் இதற்கான விழிப்புணர்வு மிக அவசியமாகும். அதையே இந்த கலந்துரையாடல் உறுதி செய்யுமென நினைக்கின்றேன்.
மக்களின் வகிபாகம்
சட்டதிலுள்ள சிறு இடைவெளிளை பயன்படுத்தி போலி தகவல்களை பரப்புவோர் தப்பித்துக்கொள்ளும் நிலை இருப்பதனால் அத்தகைய தவறான செய்திகளை பரப்புபவர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு துறைசார் வல்லுநர்களும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.
இதேநேரம் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையமானது கடந்த 28 வருடங்களாக இலங்கையில் தனது செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.
எமக்கு நாட்டிலுள்ள கட்சிகள் அனைத்தும் சமனானதே. தேர்தல் போட்டியில் சமனிலை பேணப்படுவதை உறுதி செய்வதை வலியுறுத்தவே நாம் எமது கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அதுமட்டுமல்லாது தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் வகிபாகம் அதிகரிப்பதை உறுதிசெய்யவும் அதற்கான விழிப்புணர்வுகளை ஒவ்வொரு மக்களுக்கும் சென்றடையும் வகையில் முன்னெடுத்தும் வருகின்றது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை Cineulagam
