சைபர் தாக்குதலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை...
நாட்டின் முன்னணி அரசு நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் (NCSOC) இணைப்பதற்கான அமைச்சரவை முடிவை செயல்படுத்துவது குறித்து இன்று (10.01.2026) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இலங்கை சிஇஆர்டி (CERT) மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் இணைந்து இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன.
தேசிய பிரச்சினையான சைபர் பாதுகாப்பு
நவீன உலகில், சைபர் பாதுகாப்பு என்பது இனி ஒரு தொழில்நுட்ப பிரச்சினை மட்டுமல்ல, தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை நேரடியாக பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், தகவல் உட்கட்டமைப்பை இயக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் மூலம் முக்கியமான அரசாங்க தகவல்களை அணுகுவதில் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கான தொடர்புடைய கொள்கை முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் மற்ற அரசு நிறுவனங்களை சைபர் பாதுகாப்பு மையத்துடன் இணைக்கும் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.