நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு அம்பர் நிலச்சரிவு எச்சரிக்கை
நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலச்சரிவு குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நீடித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்படி, இந்த மேம்படுத்தப்பட்ட எச்சரிக்கைகள் நாளை (11.10.2026) மாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
பதுளை மாவட்டம்: பசறை காலி மாவட்டம்: நாகொட கேகாலை மாவட்டம்: தெரணியகல, தெஹியோவிட்ட நுவரெலியா மாவட்டம்: நில்தந்தஹின்ன, வலப்பனை, அம்பகமுவ கோரளை கண்டி மாவட்டம்: உடதும்பர இரத்தினபுரி மாவட்டம்: எஹலியகொட, எலபாத, அயகம, வெலிகேபொல ஆகிய பகுதிகளுக்கு ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
பதுளை மாவட்டம்: எல்ல கொழும்பு மாவட்டம்: பாதுக்க, சீதாவக காலி மாவட்டம்: தவலம, எல்பிட்டிய, கரந்தெனிய களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட, பாலிந்தனுவர, இங்கிரிய, புலத்சிங்கள, மத்துகம, அகலவத்தை கண்டி மாவட்டம்: உடுநுவர, தும்பனை, மினிபே, யட்டிநுவர, டோலுவ, பஸ்பாகே கோரளே, உடபலத, கங்கா இஹல கோரலே கேகாலை மாவட்டம்: அரநாயக்க, யட்டியந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, ருவன்வெல்ல, கேகாலை, வரகாபொலஆகிய இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டம்: மதுரத்தை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, ஹங்குரன்கெத்த, நோர்வூட் மொனராகலை மாவட்டம்: வெல்லவாய இரத்தினபுரி மாவட்டம்: கொடகவெல, கொலொன்ன, பலாங்கொட, இரத்தினபுரி, கிரியெல்ல, குருவிட்ட ஆகிய இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.