கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்
கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான நான்கு மாத கர்ப்பிணிப் பெண் பொரளை டி சொய்சா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனது மனைவியையே அவர் இவ்வாறு எட்டி உதைத்ததாக தெரியவந்துள்ளது. எட்டி உதைத்தமையால் கரு கலைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய கடற்படை சிப்பாயின் சகோதரி ஒருவரின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதில் இந்த கடற்படை சிப்பாயும் கலந்துகொண்டார்.
இந்த கடற்படை சிப்பாயின் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் கடற்படை சிப்பாய்க்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரான கடற்படை சிப்பாய் தனது கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் பலமுறை உதைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். உதைத்த பின்னர் கர்ப்பிணி தரையில் வீழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
கர்ப்பிணிப் பெண்ணை உதைத்ததாகக் கூறப்படும் கடற்படைச் சிப்பாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
