இலங்கை கடற்படையின் சோதனையில் 116 பில்லியன் ரூபாய் போதைப்பொருட்கள் சிக்கின!
முழு நாடும் ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் இதுவரை 116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் தொடர்பாக நேற்று (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்கள் கைது
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “Ratama Ekata” தேசிய நடவடிக்கையின் கீழ் இதுவரை 379 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 66 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri