பேராதெனிய கறுப்பு பாலம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
பேராதெனிய கறுப்பு பாலத்தில் தேங்கியிருக்கும் பாரிய குப்பைகளை அகற்றும் பணியில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.
'டித்வா' சூறாவளியில் மகாவலி கங்கையில் ஏற்பட்ட காட்டாறு வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட, பாரிய மரக்கட்டைகள் மற்றும் மூங்கில் மரங்கள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
சுத்திகரிப்பு பணிகள்
அதன்படி, இலங்கை தொடருந்து துறையின் உதவியுடன், கடற்படையின் டைவிங் படை மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் சுமார் இரண்டு வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைக்குப் பின்னர்,பாலத்திற்கு அடியில் நீர் தடையின்றி வெளியேற வழிசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை தொடருந்து துறை அதன் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளவுள்ளன. மேலும், பேராதெனிய நில்லம்ப பகுதியில் மகாவலி கங்கையின் குறுக்கே உள்ள கலிகமுவ பாலத்தில் சிக்கியுள்ள மரக்கட்டைகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டு,
தேசிய நீர் வழங்கல் சபையின் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்லும் பிரதான நீர் குழாய்க்கு சேதம் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது.






நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam