ஒற்றுமையை ராஜபக்ச சகோதரர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - நவீன் திஸாநாயக்க
ராஜபக்ச சகோதரர்களின் ஒற்றுமையை பார்த்தாவது எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் விசேட கருத்தை வெளியிட்டுள்ள நவீன் திஸாநாயக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய முடியாது என்றால், ராஜபக்ச சகோதரர்களை தோற்கடிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்களிடம் இருக்கும் ஒற்றுமையை பாருங்கள். இறுதியில் என்ன நடந்தது. பசில் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார் எனக் கூறினார்கள்.
அவருக்கு பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விடயம் மாத்திரமே வழங்கப்படும். அவருக்கு நிதித்துறை வழங்கப்படாது. இவ்வாறு பல கதைகள் பேசப்பட்டன.
இறுதியில் மூன்று சகோதரர்களும் இணைந்துக்கொண்டு சிரித்தவாறு அமைச்சுக்களை பகிர்ந்து கொண்டனர்.
ராஜபக்சவினர் அதிகார பேராசைக்காக எதனையும் செய்வார்கள். இதனை நாம் புரிந்து கொள்ள முடியாத வரை நாட்டுக்கு இறைவனின் துணை மட்டுமே என கூறியுள்ளார்.