கப்பலில் வைத்து இடம்பெற்ற இரு நாட்டு கடற்படைகளின் சந்திப்பு
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளுக்கு இடையிலான 35ஆவது சர்வதேச கடல்சார் எல்லைக்கோடு (IMBL) சந்திப்பு நடைபெற்றுள்ளது.
காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள இந்தோ - இலங்கை கடல்சார் எல்லைக் கோட்டு பகுதியில், INS சுகன்யா கப்பலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கூட்டு உத்திகள்
உறவுகளை வலுப்படுத்துவதும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடல்சார் சவால்களை எதிர்கொள்ள இரு அண்டை நாடுகளின் கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படை செயல்படுத்தக்கூடிய கூட்டு உத்திகள் என்பன இதன்போது ஆராயப்பட்டுள்ளன.
இலங்கை தூதுக்குழுவிற்கு வடக்கு கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமை தாங்கினார், இந்திய தூதுக்குழுவிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் தலைமை தாங்கினார்.
காத்தான்குடியில் முன்னாள் ஆயுததாரியால் தமிழ்பேசும் பௌத்த துறவிக்கு நேர்ந்த கதி! அம்பலமாகும் ஆதாரங்கள்
விவாதிக்கப்பட்ட விடயங்கள்
இந்த ஆண்டு சந்திப்பின் போது, இரு தரப்பினரின் பிரதிநிதிகளும் அந்தந்த கடல்சார் எல்லைகளின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களைப் பற்றி விவாதித்தனர் மற்றும் முன்னைய சந்திப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்துள்ளனர்.





