“நேட்டோவை தவிர வேறு மார்க்கமில்லை” யுக்ரெய்னின் முக்கிய அறிவிப்பு! (Photos)
நேட்டோ அமைப்பில் இணைவதை விட வேறு மார்க்கம் இல்லை என்று யுக்ரெய்ன் ஜனாதிபதி வொலோடிமிர் செலேன்ஸ்கி (Volodymyr Zelensky ) தெரிவித்துள்ளார்.
நேட்டோ உறுப்பினராக இருப்பது தனது நாட்டின் நீண்டகால பாதுகாப்பிற்கு முக்கியமாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் யுக்ரெய்ன் தேசத்துக்குரிய லட்சியத்தை தாம் கைவிடப்போவதில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரெய்ன் நேட்டோ அமைப்பில் இணைய விரும்பினாலும் அது இப்போது நடக்காது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதற்கு நீண்ட செயல்முறை அவசியம். அதனை இன்னும் யுக்ரைன் ஆரம்பிக்கவில்லை. .
இந்தநிலையில் ரஸ்ய படைகள் இன்னும் தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், யுக்ரெய்னை பாதுகாக்க நேட்டோவின் உறுப்பினராக இருப்பதை விட வேறு வழியில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுக்ரைன் போன்ற நாடுகளின் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கான யோசனையை நேட்டோவின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வரவேற்றுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் யுக்ரைன் மற்றும் ரஸ்யா தொடர்பி;ல் விவாதிப்பதற்காக ஒன்று கூடுகின்றனர் பிரசல்ஸில் இந்த ஒன்று கூடல் இடம்பெறுகிறது.
இதேவேளை இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் Liz Truss யுக்ரெய்ன் தலைநகரை சென்றடைந்துள்ளார் யுக்ரைனுடனான எல்லையில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெற்றதாக ரஸ்யா கூறியபோதும், மேற்குலகம் இந்த கூற்றில் "தவறாகவேனும் மயங்கக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.