நேட்டோ இராணுவக்கூட்டணியில் இணைய ஆதரவு திரட்டும் ஜெலென்ஸ்கி!
உக்ரைனின் நேட்டோ உறுப்பினர் விண்ணப்பத்திற்கான ஆதரவைப்பெற உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பல்கேரியாவிற்கு சென்றுள்ளார்.
பல்கேரியாவின் புதிய மேற்கத்திய சார்பு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜெலென்ஸ்கி பல்கேரியாவிற்கு சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஐரோப்பிய ஒருங்கிணைப்பு மற்றும் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதித்துள்ளனர்.
நேட்டோ இராணுவக்கூட்டணியில் இணைய ஆதரவு
பல்கேரிய பிரதமர் நிகோலாய் டென்கோவ், உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தனது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆதரவை வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான அதன் ஆதரவில் பல்கேரியா உறுதியுடன் உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், உக்ரைன் போர் முடிவுக்கு வந்ததும் நேட்டோ இராணுவக் கூட்டணியில் இணைவதற்கான ஆதரவை பல்கேரியாவின் பாராளுமன்றம் அறிவிறித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |