ரஷ்யாவின் அடுத்த இலக்காக மாறிய சுவீடன்! அதிகரிக்கப்படும் பாதுகாப்பு
சுவீடனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுவீடன் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குழு அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்ய தரைப்படைகள் உக்ரைன் போரின் நடுவில் இருந்தாலும், சுவீடனுக்கு எதிராக ரஷ்யா மற்றொரு வகையான இராணுவ தாக்குதலை நடத்தலாம் என சுவீடன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், சுவீடன் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் அறிக்கையில், ரஷ்யா தனது இராணுவ சக்தியை பயன்படுத்துவதற்கான வரம்பை மேலும் குறைத்துள்ளது.
புதிய பாதுகாப்பு உத்தியை உருவாக்க வேண்டும்
மேலும் அதிக அரசியல் மற்றும் இராணுவ அபாயத்தை எடுக்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
இதன் விளைவாக, ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள் அல்லது அணு ஆயுதங்களை பயன்படுத்தி சுவீடனை தாக்கும் அபாயம் இன்னும் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், சுவீடனுக்கு புதிய பாதுகாப்பு உத்தியை உருவாக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பிறகு, சுவீடனும் நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பு படைகளின் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |