நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை: அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை
அரசாங்கத்தின் முடிவை மாற்றத் தவறினால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடித்து பிற்பகல் 2 மணி வரை மாற்றியமைக்கும் இந்த முடிவை அரசாங்கம் மாற்றத் தவறினால், அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்
மேலும் தெரிவிக்கையில், அடுத்த ஆண்டு ஜனவரி (2026) முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவுக்கு எதிராக, டிசம்பர் இரண்டாம் வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் சாதகமான பதிலளிக்கத் தவறினால், இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவும் தயங்க மாட்டோம்.

கடந்த சில வாரங்களாக பாடசாலைகளுக்கு சென்று ஆசிரியர்களுடன் இது குறித்து கலந்துரையாடி வருகிறோம். அவர்கள் குறித்த முடிவுக்கு எதிராக உள்ளனர் என குறுிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விபத்து
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam