நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை: ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று(07.03.2026) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, 26 ஆயிரத்து 895 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 15 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையை கடந்து செல்லும் 60 ஆயிரம் கப்பல்கள் : போர் நீடித்தால் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
அதே சமயம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 236 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 109 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 282 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 56 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில், பிற போக்குவரத்துக் குற்றங்களுக்காக 4 ஆயிரத்து 160 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.