நாடளாவிய ரீதியில் QR குறியீடு முறையில் எரிபொருள் விநியோகம் (Photos)
நாடளாவிய ரீதியில் வாகன இலக்கங்களின் அடிப்படையில் சீரான வகையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சித்தங்கேணி
சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீடு முறையில் சீரான பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
QR குறியீடு முறையில் இன்றையதினம் சீராக இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோலினை பெற்றவர்கள் மீண்டும் பெட்ரோலினை பெறாத வகையில் எரிபொருள் அட்டை பரீட்சிக்கப்பட்டு பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் இவ்வாறு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி
வடமராட்சி மந்திகை, மற்றும் புலோலி ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமைதியான முறையில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் 12:30 மணியிலிருந்து பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
இங்கு பெட்ரோலை பெறுவதற்காக நேற்று பிற்பகல் 5:00 மணியிலிருந்து காத்திருந்தும் மக்கள் பெட்ரோல் பெற்று சென்றதுடன், இதற்காக இன்றும் மிக நீண்டவரிசையில் காத்திருந்துள்ளனர்.
இதே வேளை டீசல் பெறுவதற்க்காக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பார ஊர்திகள் உட்பட டீசல் வாகனங்களும் காத்திருந்துள்ளன.
புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் 1;30 மணியிலிருந்து பெட்ரோல் விநியோகம் இடம் பெற்றது. இங்கும் மிக நீண்ட வரிசையில் மக்கள் தமது மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, கார்களுடன் காத்திருந்து பெட்ரோல் பெற்றுச் சென்றுள்ளனர்.
இன்றைய தினம் குறித்த இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையில் பொலிஸார் பாதுகாப்பு மற்றும் வரிசை ஒழுங்குகள் பேணுவதுடன் இராணுவமும் இணைந்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை பருத்தித்துறை பிரதேச செயலர் தலமையில் குறித்த இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இறுதி இலக்கங்களின் அடிப்படையில் எரிபொருள் அட்டையில் பதியப்பட்டு வாகன இலக்கங்கள் சரிபார்க்கப்பட்டு குறித்த பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
செய்தி :எரிமலை