12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியில் கட்டுப்பாடு: கஞ்சன விஜேசேகர அறிவிப்பு
அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக, அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பதிவிலே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமைக் காரணமாகவே, எரிபொருள் அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
QR system was introduced since the daily fuel demand cannot be fulfilled. Due to Forex issues, Fuel imports has to be restricted in the next 12 months.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 25, 2022
CPC has never distributed Fuel daily to Every single Fuel Station. Practically Not Possible even when stocks are unlimited.
இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமோ அல்லது இந்திய எரிபொருள் நிறுவனமோ,ஒருபோதும், ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் நாள்தோறும் எரிபொருளை விநியோகித்ததில்லை.
அத்துடன் வரையறையில்லாத கையிருப்பு இருந்த காலத்தில் கூட அது நடைமுறை சாத்தியமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாளைய தினம்(26) முதல் லங்கா ஐஓசி மற்றும் சிபெட்கோ ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறைமை நடைமுறைக்கு வரும் எனவும் அவர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.