நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் புதிய காத்தான்குடி மற்றும் டீன் வீதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் தலைமையிலான பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு விசேட பொலிஸ் குழுவினரால் மட்டக்களப்பு ,கொக்குவில், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 8 நாட்களில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 16 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக விசேட பொலிஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மற்றும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வகையான திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் 10.12.2022 நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைவாக, முல்லைத்தீவு இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 57வது படைப்பிரிவின் தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், 571 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் கம்லத் ஆகியோரின் வழிநடத்தலில் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
