நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே கால அவகாசம்! (Video)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், 10 மில்லியன் ரூபாய் நீர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய தற்போதும் நாடாளுமன்றினை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 03 மில்லியன் ரூபாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 04 மில்லியன் ரூபாவும், உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 03 மில்லியன் ரூபாவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலுவைத் தொகையினை பெற்றுக்கொள்வதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள், பொது நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருடனும் நேரடியாக கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல முக்கிய செய்திகளின் தொகுப்பை இக் காணொளியில் காணலம்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
