41 கோடி ரூபாய் வருமானத்தை பெற்றுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
கடந்த சில மாதங்களில் சுமார் 41கோடி ரூபாயினை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை சேமித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் உரியகொடுப்பனவுகள், போக்குவரத்து செலவு மற்றும் மேலதிக வேலைநேர கொடுப்பனவு போன்றவற்றினை தவிர்த்து சுயமாக செயற்பட்டு இந்த இலாபத்தினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் திட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஊழியர் சமூக திட்டத்திற்கு அமையவே இந்த இலாபம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய,கம்பஹா, இரத்தினபுரி மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கபட்டு வரும் குடிநீர் திட்டங்களினூடாக பணத்தினை மீதமாக்க கூடியதாய் உள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.