உடைந்தது தொழிலாளர் தேசிய சங்கம் மலர்ந்தது மலையகத்தில் புதிய அமைப்பு..
தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய நபர்கள் உட்பட பலர் உடைந்து மலையகத்தில் புதிய அரசியல் கட்சியொன்றினையும் தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்க உள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் தெரிவித்து்ளளார்.
நேற்றையதினம் (16) ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகா நாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர் கொடுத்து போராடியவர்கள்
குறித்த கட்சியிலிருந்து முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் ராம்,முன்னாள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் அழகுமுத்து நந்தகுமார்,உட்பட பல தோட்ட தலைவர்கள் இளைஞர்கள் என பெரும் எண்ணிக்கையிலான அதிருப்தியாளர்கள் கட்சியிலிருந்து வெளியேறி இருப்பதாகவும் அவர்கள் இப்போது ஒரு அமைப்பாக செயப்படுவதாகவும் எதிர்காலத்தில் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியாக உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வெள்ளையன் என்பவரால் மக்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கட்சிதான் தொழிலாளர் தேசிய சங்கம் அதில் கடந்த 20 வருடத்திற்கு மேலாக தான் கட்சியில் உண்மையானவராக இருந்ததாகவும் ஆனால் கடந்த சில காலங்களாக கட்சியின் கொள்கைக்கு மாறுபட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் கொள்கையினை பின்பற்றி அவர்களுடன் இணைந்து செயப்படுவதாகவும் உண்மையாக உழைத்தவர்களுக்கு கட்சியில் இடம் வழங்காது புதிதாக வந்தவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டு பழையவர்கள் அனைவரும் பின் தள்ளப்பட்டுள்ளார்கள் தாயகம் என்ற கட்டடம் திறப்பு விழாவின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் அழைக்கப்பட்டார்.
அப்போது கட்சியிலிருந்து நான் வெளியில் வந்தேன் காரணம் தலைவர் திகாம்பரத்தினை குடுகாரன் என்று திட்டியவர்கள்,முட்டையடித்தவர்கள் அவர் வளரக்கூடாது என்று போராட்டம் செய்தவர்களுக்கு தான் இன்று இந்த கட்சியில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன அன்று தலைவருக்காக சிறை சென்றவர்கள்,உயிர் கொடுத்து போராடியவர்கள் புறந்தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஜீவன் தொண்டமான்
அதே நேரம் தொழிலாளர் தேசிய சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸி ஒரு குழுவாக மாறியுள்ளது. அன்று திகாம்பரம் கட்டிய வீடுகளை தீப்பெட்டி என்றார்கள்,கூரை பறக்கிறது என்றார்கள் ஆனால் அதே ஜீவன் தொண்டமான் சில வீடு கட்டி தருவதாகவும் பல்கலைக்கழகம் கட்டித்தருவதாகவும் விவசாய கல்லூரி கட்டித்தருவதாகவும் 20 பேச்சஸ் காணி தருவதாகவும் தேர்தல் காலங்களில் தெரிவித்தார்.
ஆனால் அவர் அமைச்சராகி ஒரு வீடு கூட கட்டவில்லை காரணம் திகாம்பரம் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருந்த வந்த சிலர் திகாம்பரத்தினை மூளையினை இல்லாது செய்து விட்டார்கள். அன்று இருந்தது திகாம்பரத்தின் மூளை இன்று உள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் மூளை அன்று ஜீவன் அமைசராக இருந்த போது நாடாளுமன்றத்தில் பேசியிருந்தால் அல்லது விமர்ச்சித்திருந்தால் நிச்சயம் ஜீவன் அவர்கள் ஒரு வீடாவது கட்டிக்கொடுத்திருப்பார்.
ஆகவே அவர்கள் அதை கேட்கவில்லை கொழும்பிலிருந்து வரும் எல்லோரும் ஒரே வாகனத்தில் கினிகத்தேனை வரை ஒன்றாகத்தான் வருவார்கள; கினிகத்தேனை மேல் வந்த பின் இருவரும் சண்டைப்போட்டுக்கொள்வார்கள்,இவையாவும் பொய் பின்னர் திரும்ப போகும் போது கினிகத்தேனைக்கு கீழ் ஒன்றாகத்தான் போவார்கள் ஆகவே கொழும்பு சென்று மலையக இனத்தினை அடகு வைத்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனவே இந்த அமைப்பிலிருந்து நாங்கள் அனைவரும் வெளியேறி விட்டோம் இன்னும் நிறைய பேர் வெளியேற இருக்கிறார்கள் எனவும் எதிர்காலத்தில் இந்த அமைப்பு புதிய அரசியல் கட்சியாக பெயர் சூட்டி அதனை தொழிற்சங்கமாகவும் பதிவு செய்ய உள்ளதாகவும் அதற்கு தலைவராக தன்னை தெரிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு கட்சி
இதே நேரம் ஒரு சில இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களும் குறித்த அமைப்பில் இணைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவரும் இந்நாள் உறுப்பினருமான அழகுமுத்து நந்தகுமார் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதன் போது தாங்கள் அரசாங்கம் மக்களுக்கு நல்ல விடயங்கள் செய்யும் பட்சத்தில் அதில் அவர்களுடன் இணைந்து செயப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அத்தோடு தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஏனைய மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கும் தற்போதுள்ள தொழிற்சங்கங்கள் பேசுவதில்லை என்றும் இது குறித்து தொழிற்சங்கங்கள் கடந்த காலங்களில் ஏமாற்றி வந்துள்ளதாகவும் எனவே தாங்கள் உருவாக்கி உள்ள அமைப்பு அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

இது குறித்து முன்னாள் மத்திய மாகாண சபை தமிழ் கல்லி மற்றும் விவசாயதுறை அமைச்சர் ராம் கருத்து தெரிவிக்கையில் நான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த கட்சியினை விட்டு வெளியேறி தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து பயணித்தேன் ஆனால் இரண்டு கட்சிகளுக்கு வேறுபாடு கிடையாது.
அவர்கள் மக்களுக்கான முழுமையான சேவையினை முன்னெடுப்பதிலும் கூடிய கவனம் செலுத்தவில்லை அதனால் நாங்கள் அதிருத்தி அடைந்தோம் தோட்ட மக்கள் மாத்திரமின்றி மலையகத்தில் இந்தியா வம்சாவளியை சார்ந்த பலர் இருக்கிறார்கள் அவர்கள் பற்றி குரல் கொடுப்பதற்கோ அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பார்ப்பதற்கோ எவரும் கிடையாது இன்றும் மலையக தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் தங்களுடைய சுய நலத்திற்காகவே செயப்படுகின்றன எனவே நாங்கள் புதிய அமைப்பு ஒன்றினை ஆரம்பித்து மலையகத்தில் குறிப்பாக பதுளை ஊவா சப்பிரகமுவ மாகாணங்களையும் இணைத்துக்கொண்டு செய்யப்படவுள்ளோம் எதிர்காலத்தில் எங்களுடைய அமைப்பு ஒரு கட்சியாக தொழிற்சங்கமாக பதிவு செய்து மக்களுக்கான உண்மையான தேவைகளை அறிந்து முன்னெடுப்போம் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.