சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் சிரேஷ்ட மாணவத் தலைவர்களுக்கான சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டமானது இன்று (06) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக தேசிய கொள்கை தொடர்பாக மாணவத் தலைவர்களுக்கு அறிவூட்டுதல், பாடசாலையினுள் சிறுவர் துஷ்பிரயோகம் நடப்பதை குறைப்பதற்கும் தடுப்பதற்கும் மாணவத் தலைவர்களின் பங்களிப்பினைப் பெறுதல், சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக முடிவெடுக்கும் செயற்பாட்டில் மாணவத் தலைவர்களைப் பங்குபற்ற வைத்தல், பாடசாலையினுள் சிறுவர் நட்பு மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு மாணவத் தலைவர்களின் தலைமைத்துவ அறிவு, திறன், மனப்பாங்கை மேம்படுத்துவதற்கான தலையீடு மற்றும் சிறுவர் பாதுகாப்பின் பொறுப்பு மற்றும் பொறுப்புக் கூறும் மாணவத் தலைவர் சமூகத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி கல்விப் பணிப்பாளர் சுதர்சன், திருகோணமலை பொது வைத்தியசாலையின் உள வைத்திய நிபுணர் பி. டிமிது மகேந்திரா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

சிறுவர் பாதுகாப்பு
இதன்போது, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ். றியால், திருகோணமலை வலய சிறுவர் மற்றும் மகளிருக்குரிய பொறுப்பதிகாரி, பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |